Tumgik
maruthamtv · 3 years
Text
“அசைன்மென்ட்”-ஆக (“assignment”) கொடுக்கப்பட்ட அரசு நிலத்தை ஆட்டையை போட்டு ஓபிஎஸ் விற்பனை ? செய்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு.
அது அரசு நிலம் இல்லை என்றும் ஆதாரப் பூர்வமாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் நிரூபிக்க முடியுமா என்று ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
போடி தொகுதியில் , பழனிசெட்டிபட்டி மற்றும் முத்துத்தேவன்பட்டி இடையே போடி விலக்கில் அமைந்திருந்த போஜராஜ் மில் கம்பெனி ஏறத்தாழ 100 ஏக்கர் நிலமானது, 50 வருடங்களுக்கு முன்பு, அன்றைய அரசாங்கத்தால் அந்த கம்பெனிக்கு “அசைன்மென்ட்”-ஆக (“assignment”-ஆக) கொடுக்கப்படவில்லை என்றும், ஆதலால் அது அரசு நிலம் இல்லை என்றும் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்க முடியுமா? என்று தற்போது கேள்வி எழுப்பட்டுள்ளது.
மேலும் திமுக போடி தொகுதி வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் தொகுதி மக்களிடம் வாக்கு சேகரிக்கும் போது, பழனிசெட்டிபட்டி மற்றும் முத்துத்தேவன்பட்டி இடையே, போடி விலக்கில் அமைந்திருந்த கம்பெனி மூடப்பட்டதின் விளைவாக, அதில் பணிபுரிந்த மில் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். அந்த நிலத்தை தற்போது ஓ.பி.எஸ் மற்றும் அவரின் பினாமிகளால் பிளாட் போட விற்பனை செய்து வருகின்றனர் என்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
50 வருடங்களுக்கு முன்பு, தமிழக அரசு, அந்த இடத்தை ஒரு தொழில் நிறுவனம் அமைந்தால் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நல்லெண்ணத்தில், அந்த இடத்தை மில் அமைப்பதற்கு “அசைன்மென்ட்”-ஆக (“assignment”-ஆக) கொடுத்திருக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பல கம்பெனிகளுக்கு இப்படி அரசாங்கம் இடம் கொடுத்துள்ளது.
அப்படி இருக்கும் பட்சத்தில், அந்த இடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த நிறுவனம் பணநஷ்டத்தால் மூடப்பட்டாலும் கூட, அந்த நிலம் “அசைன்மென்ட்”-ஆக (“assignment”-ஆக) கொடுக்கப்பட்டதன் காரணத்தால், அது அரசு நிலமாகவே இருக்கும். அந்த இடத்தை அனுபவித்துக் கொள்ளத்தான் உரிமையே தவிர சொந்தம் கொள்ள முடியாது.
எனவே அந்த நிலம் அரசாங்கத்தால் அங்கே செயல்பட்டு வந்த நிறுவனத்திற்கு “அசைன்மென்ட்”-ஆக (“assignment”-ஆக) கொடுக்கப்பட்டதா என்ற விவரத்தினை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்படி அந்த இடம் அரசு நிலமாக இருக்கும் பட்சத்தில், அரசாங்கம் அந்த இடத்தை மக்களின் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள மட்டுமே அனுமதி உண்டு. ஆனால் தற்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசு நிலத்தை ஆட்டையை போட்டு விற்பனை ? செய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அது அரசு நிலம் இல்லை என்று
instagram
0 notes
maruthamtv · 3 years
Text
பெண் தலையில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா வடக்கு மண்டல தெருவில் குடியிருந்து வருபவர் சுரேஷ் மனைவி சித்ரா. இவருக்கு இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. சுரேஷ் இராணுவத்தில் வேலை பார்த்து வருவதாகவும் ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னிடம் வாழாமல் கொடுமை படுத்தி வருகிறார். மேலும் கஞ்சா வியாபாரி குருவம்மாள் என்பவருடன் கூட்டு சேர்ந்து தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக கூறி, உத்தமபாளையம் காவல் நிலையத்தில் பல முறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இன்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக முன்பு திடீர் என தன் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்தார். இதனைக் கண்ட காவலர்கள் தண்ணிர் ஊற்றி காப்பாற்றி தேனி காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு பொதுமக்கள் குடிப்பதற்க்கும். கைகளை சுத்தம் செய்வதற்க்கும் தனித்தனியாக வைத்துள்ள தண்ணிர் டேங்கில் தண்ணீர் இல்லாதது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
instagram
0 notes
maruthamtv · 3 years
Text
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்.
தேனி மாவட்டஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர்களை ஏழாவது ஊதியக் குழுவில் அரசு ஊழியர் ஆக்குவேன் என உறுதிமொழி கொடுத்தார். ஆனால் கொடுத்த வாக்குறுதியை இன்று ஆளுகின்ற அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. எனவே சட்டமன்றத்தில் அறிவித்த 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர்களை நிரந்தரமாக்குவேன் என கொடுத்த உறுதிமொழியை உடனடியாக நிறைவேற்ற கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.
0 notes
maruthamtv · 3 years
Text
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி. காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொது மக்கள். சின்னமனூர் ஜக்கம்மாள் கோவில் தெருவை சேர்ந்த ஐயர் சாமி (55) நேற்று காலை சின்னமனூர் காவல் நிலையம் அருகே சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார். அவரை உடனடியாக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சின்னமனூர் காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டு பிடிக்காத காரணத்தால் உறவினர்கள் இன்று காலை காவல் நிலைத் தை முற்றுகையிட்டு உடனடியாக விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
0 notes
maruthamtv · 3 years
Text
துப்புரவு பணியாளர்களின் பிரச்சனை தீர்க்க பொது விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 72 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தினர் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
தேனி பெத்தனாட்சி திருமண மண்டபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆறு நகராட்சிகள், 22 பேரூராட்சிகள் பணியாற்றும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு, பணி மாறுதல், ஊதியம் சமமாக வழங்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு சாதிய ரீதியாக நடக்கும் கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். ஓப்பந்த ஊழியர்கள், சுயஉதவி குழு பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இஎஸ்ஐ, பிஎப் வழங்கியதாக ஊழல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர், நகராட்சி, பேரூராட்சி, அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இது குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ், நீதிபதி, மற்றும் சபாய் கர்மாச்சாரி அந்தோலன் குழு தலைமையில் பொது விசாரணை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதி���் மாநிலத் தலைவர் அன்பு வேந்தன், மாநில துணை தலைவர் ஜெகன்நாதன், தேனி மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட செயலாளர் மணிகண்டன், துணை தலைவர் வேல்முருகன், உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
instagram
0 notes
maruthamtv · 3 years
Text
அங்கன் வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அங்கன் வாடி ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். முறையான வரையறுக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது பணி கொடையாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ. 10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ. 5 லட்சமும் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். 10 வருடம் பணி புரிந்த உதவியாளர்களை அங்கன் வாடி ஊழியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். உள்ளுர் மற்றும் மாவட்டங்களில் உதவியாளர், ஊழியர்களுக்கு பணிமாறுதல் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாவட்டம் தலைவர் சாந்தியம்மாள், ஜாக்டோ-ஜியோ மாவட்ட கன்வீனர் ரெங்கராஜன், நெடுஞ்சாலை பணியாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் முத்தையா, அங்கன் வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நாகலட்சமி உள்பட ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
instagram
0 notes
maruthamtv · 3 years
Text
கருனை அடிப்படையில் உரிய கல்வித் தகுதிக்கு கேற்ப பணி நியமனம் வழங்க மறுக்கும் பேரூராட்சி உதவி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்.
தேனி மாவட்டம் பழனிச்செட்டிபட்டி பேரூராட்சியில் ரத்னாதேவி கனவர் ராஜா நிரந்தர துப்புரவு பணியாளராக பணிபுரிந்த போது கடந்த 1.9.2019 இறந்து விட்டார். அவருடைய மனைவி ரத்னாதேவி கருனை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க உரிய சான்றுகள் அனைத்தும் அலுவலகத்தில் சமர்பித்து சரிபார்க்கப்பட்டுள்ளது. பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் காலிபணியிடம் இல்லை என்றால் தேனி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் வரித்தண்டலர், இளநிலை உதவியாளர், பணி வழங்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் தேனி மண்டல பேரூராட்சி உதவி இயக்குநர், சாதி பாகுபாடோடு கருனை அடிப்படையில் வேலை வழங்காமல் ரத்னாதேவிக்கு அவர் கணவர் பார்த்த துப்புரவு பணி நியமன ஆணை வழங்க பரிந்துரை செய்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர், பேரூராட்சிகளின் இயக்குனர், பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய இயக்குனர், தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்டவர்களுக்கு, உரிய கல்வித் தகுதிக்கேற்ப கருனை அடிப்படையில் பணிநியமனம் வழங்க கோரி ரத்னாதேவி புகார் தெரிவித்துள்ளார்.
instagram
0 notes
maruthamtv · 3 years
Text
ஜல்லிக்கட்டு நாயகரல்ல, ஜல்லிக்கட்டு வில்லன் ஓபிஎஸ். துனண முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்து அவரது சொந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் புதிய பேருந்துநிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காளை படம் பொறித்த போஸ்டர்களைப் பார்க்க முடிந்தது. “காளை மாடு வளர்ப்புச் சட்டம் - 2019 கொண்டுவந்த ஓ.பி.எஸ் ஜல்லிக்கட்டு நாயகரல்ல, ஜல்லிக்கட்டு வில்லன்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்த அந்த போஸ்டர்கள், நாட்டுமாடு நலச்சங்கம் சார்பில் ஒட்டப்பட்டப்ப்டுள்ளது.
instagram
0 notes
maruthamtv · 3 years
Text
ஓபிஎஸ் தொகுதியில் அரசுக் கல்லூரி ஆசிரியர் 14 மாதங்களாக சம்பளமின்றி தவிப்பு . ஐந்து முறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை. தேனி மாவட்டம் கோட்டூர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி , அரசு கல்லூரியாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு தொகுப்பு ஊதியம் மற்றும் பகுதி நேரமாக பலர் பணியாற்றி வருகின்றனர். அரசு கல்லூரியில் UGC விதி முறைப்படி 2009க்கு முன்பு எம்பில் முடித்தவர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதி உண்டு. இதன் அடிப்படையில் கோட்டூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றிய கௌரவ விரிவுரையாளருக்கு 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையில் சம்பளம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் 2020 மார்ச் மாதம் வரையில் கல்லூரி முதல்வர் சுப்புராஜ் திட்டமிட்டு ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு சம்பளத்தை வழங்காமல் நிறுத்தி வைத்து விட்டார். கொரானா நோய் பரவல் காரணமாக கல்லூரி மூடப்பட்டு பின்னர் டிசம்பர் 7 தேதி மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டது. கல்லூரிக்கு சென்ற கௌரவ விரிவுரையாளரை, புதிதாக வந்துள்ள முதல்வர் செல்லராஜ் என்பவர் உங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட 14 மாதம் சம்பளத்தை பெற்றால் மட்டுமே பணியில் மீண்டும் தொடரலாம் என்று தெரிவித்துவிட்டார். எனவே இது தொடர்பாக பேராசிரியர் 14 மாத சம்பளம் வழங்க கோரி ஐந்து முறை ஓபிஎஸ் இடம் நேரடியாக மனு அளித்தார்.. உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய ஓபிஎஸ் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட அரசு கல்லூரி ஆசிரியர்கள் கூறுகையில். ஆண்டிப்பட்டி அரசு கல்லூரியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் கொரானா காலகட்டத்திலும் அனைவருக்கும் உரிய சம்பளம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது .ஆனால் ஓபிஎஸ் தொகுதியில் உள்ள கோட்டூர் அரசு கல்லூரியில் முதல்வர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்து பழிவாங்கி வருகிறார்.
instagram
0 notes
maruthamtv · 3 years
Text
7 உட்பிரிவுகளை ஒண்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் அரசாணை வழங்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் காமராஜர் சிலை அருகில் தமிழர் விடுதலை களத்தின் நிறுவனத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய மாநில அரசுகள் பள்ளர்,குடும்பர்,காலாடி,கடையர்,வாதிரியார், தேவேந்திர குலத்தான்,பண்ணாடி உள்ளிட்ட ஏழு ஜாதிகளை தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக் கோரியும், இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்கோரியும், வெண்ணி காலடிக்கு மணிமண்டபம் கட்ட கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. இதில் தேனி தமிழர் விடுதலை களம் தேனி மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் வீரமணி . மாவட்ட இளைஞரணி தலைவர் அசோக்குமார், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பாண்டியராஜன், திருச்சி சிவா உள்பட தேவேந்திர குல வேளாளர் சமூக பொது மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
0 notes
maruthamtv · 3 years
Text
கோட்டூர் தேவேந்திர குல வேளாளர் சமூக பொது மக்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். தேனி மாவட்டம் கோட்டூர் தேவேந்திர குல வேளாளர் சமூக கிராம மக்கள் மாபெரும் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய மாநில அரசுகள் பிசி, எம்பிசி, டிஎன்சி, பட்டியலில் இருந்து வெளியேற்றி 15 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க கோரியும், பள்ளர்,குடும்பர்,காலாடி,கடையர்,வாதிரியார், தேவேந்திர குலத்தான்,பண்ணாடி உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை ஒண்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் அரசாணை வழங்கக் கோரியும், சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தை உடனே செயல்படுத்தக்கோரியும் மாபெறும் கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேனி கோட்டூர் தேவேந்திர குல வேளாளர் சமூக பொது மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
instagram
0 notes
maruthamtv · 3 years
Text
வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தொடக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக மதுரை மண்டல இயக்குனர் அம்பேத் கூறுகையில், தேனி மாவட்டம் வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை மையம் மற்றும் தேர்வு மையம் நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழக உயர் கல்வித்துறையால் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கும், தொழில் சார்ந்த பட்டயப் படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகள், சேர்க்கை நடை பெறுகிறது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 31 தேதி என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுகின்ற மாணவர்களுக்கு வருகின்ற ஜீன் 2021 ல் முதலாம் ஆண்டு தேர்வு எழுதும் வாய்ப்பு என்றும் தெரிவித்தார். மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி , தேனி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் தாங்கள் விரும்பிய பாடப் பிரிவுகளில் விண்ணப்பித்து சேர்க்கை கிடைக்காத மாணவர்கள் தாங்கள் விரும்பிய அரசு கல்லூரிலேயே தாங்கள் விரும்பிய பாடப் பிரிவினை படிக்கும் வாய்ப்பினை தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழகம் வழங்குகிறது என்றார்.
instagram
0 notes
maruthamtv · 3 years
Text
தேவேந்திர குல வேளாளர் அரசாணை மற்றும் பட்டியல் வெளியேற்றத்தை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம். 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து ‘தேவேந்திர குல வேளாளர்’ அரசாணை பிறப்பித்து பட்டியல் பிரிவில் இருந்து நீக்க வேண்டும் என்று தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு கட்சியினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி தேவேந்திர குல வேளாளர் நலச்சங்கம் சார்பில் தேவேந்திர குல வேளாளர்’ அரசாணை மற்றும் பட்டியல் வெளியேற்றத்தை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் நலச்சங்க தலைவர் இராஜேந்திரன், மற்றும் பல்வேறு கட்சிகளில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமுதாய முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
instagram
0 notes
maruthamtv · 3 years
Text
வீரபாண்டி தேவேந்திர குல வேளாளர் சமூக பொது மக்கள் மாபெரும் கண்டன ஊர்வலம். தேனி மாவட்டம் வீரபாண்டி தேவேந்திர குல வேளாளர் சமூக கிராம மக்கள் மாபெரும் கண்டன ஊர்வலம் நடத்தினர். மத்திய மாநில அரசுகள் BC,MBC,DNC, பட்டியலில் இருந்து வெளியேற்றி 15 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க கோரியும், பள்ளர்,குடும்பர்,காலாடி,கடையர்,வாதிரியார், தேவேந்திர குலத்தான்,பண்ணாடி உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை ஒண்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் அரசாணை வழங்கக் கோரியும், சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தை உடனே ���ெயல்படுத்தக்கோரியும் மாபெறும் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. கடந்த 12 தேதி தேவாரம் பேருந்து நிலைய��் அருகில் மண்ணின் மைந்தர் இயக்க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று 16 தேதி தேனி வீரபாண்டி தேவேந்திர குல வேளாளர் சமூக பொது மக்கள் சார்பில் மாபெரும் கண்டன ஊர்வலம் மற்றும் சாலை மறியல் செய்தனர்.
instagram
0 notes
maruthamtv · 3 years
Photo
Tumblr media
மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். தேனி மாவட்டம் தேவாரம் பேருந்து நிலையம் அருகில் மண்ணின் மைந்தர் இயக்கத்தின் தலைமை ஒருங்கினைப்பாளர் மாமள்ளன் கனகமுத்து தலைமையில் நடைபெற்றது. மத்திய மாநில அரசுகள் BC,MBC,DNC, பட்டியலில் இருந்து வெளியேற்றி 15 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க கோரியும், பள்ளர்,குடும்பர்,காலாடி,கடையர்,வாதிரியார��, தேவேந்திர குலத்தான்,பண்ணாடி உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை ஒண்றிணைத்து மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர் அரசாணை வழங்கக் கோரியும், சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தை உடனே செயல்படுத்தக்கோரியும் மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இணை ஒருங்கிணைப்பாளர் கேசவராசாமள்ளர், துணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்வாசகக்குடும்பன், மகளிர் அணி செயலாளர் சுமதி, தமிழின கூட்டமைப்பு திருவாரூர் ஆற்றல் உட்பட நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் செயபால், கம்பம் சட்டமன்ற தொகுதி செயலாளர் குணசேகரன், எராளமான மண்ணின் மைந்தர் இயக்க நிர்வாகிகள் மற்றும் தேவாரம் தேவேந்திர குல வேளாளர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். https://www.instagram.com/p/CIsfpitl7gk/?igshid=1gank5e85ub00
0 notes
maruthamtv · 3 years
Photo
Tumblr media
கட்டப் பஞ்சாயத்தில் முதியவரை காலில் விழ வைத்து, 2 ஆயிரம்அபராதம் விதிப்பு. தேனி மாவட்டம் போடி தாலுகா ராசிங்கப்புரம் கிராமத்தில், கரியப்பகவுண்டன்பட்டி, 4வது வார்டு, சாதி சங்க தலைவர், உபதலைவர், பொருளாளர், மற்றும் சிலர் சேர்ந்து சாதி சங்க பொதுக் கூட்டத்தில் வயதான முதியரை சட்டை இல்லாமல் கட்டப் பஞ்சாயத்தில் காலில் விழ வைத்து 2ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். மேலும் இந்த கிராமத்தில் முன்னால் தலைவர் உள்பட ஐந்து குடும்பத்தை சேர்ந்தவர்களை ஊரைவிட்டு ஓதுக்கி வைத்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயதான முதியவரை சட்டை இல்லாமல் காலில் விழவைத்து அவமானப்படுத்தி 2 ஆயிரம் அபராதம் விதித்தது தொடர்பாக போடி தாலுகா காவல்நிலையத்தில் சத்தியா என்ற பெண் புகார் தெரிவித்துள்ளார். https://www.instagram.com/p/CImauLaFvaC/?igshid=1hk8jq1aq5dzi
0 notes
maruthamtv · 3 years
Photo
Tumblr media
391 வது நாள் கருப்பு சட்டை அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். தேனி மாவட்டம் போடி திருவள்ளுவர் சிலை அருகில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் அரசனை பிறப்பிக்க வலியுறுத்தி, 391வது நாள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுவில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிடும் வரை கருப்புச்சட்டை அணிவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுவரையில் தேவேந்திரகுல வேளாளர் அரசாணை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை இதனை தொடர்ந்து 391 வது நாள் நிறைவடைந்தது முன்னிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் வழி காட்டுதல்படி தேனி மாவட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், ஏராளமானவர்கள் கலந்து கொண்டு நடத்தினர். https://www.instagram.com/p/CIc4A0IFnos/?igshid=1jy7xxzvcqoky
0 notes