Tumgik
thetamilpoems · 2 years
Text
ஏன்! - வாசகர் கவிதை(76)
ஏன்! – வாசகர் கவிதை(76)
ஆசைப்பட்டேன் அவசரப்பட்டேன் அவதிபட்டேன் இவை அனைத்தும் இருபதில்யேன்! ஈதல்செய்தேன் இரக்கப்பட்டேன் இன்பம்பெற்றேன் இவையனைத்திலும் அளவை மீறினேன்! ஊக்கம்பெற்றேன் உடைந்தேன் உணர்ந்தேன் என்னிடமுள்ள என்னை இழந்தேன்! அனைத்தும் அறியா என்று அறிந்தேன் என்னுடைய வாழ்வை வாழத் துணிந்தேன். -நான் நானாக (சி. சிவஞானவேல் ) Madurai
View On WordPress
0 notes
thetamilpoems · 2 years
Text
மகளின் மகப்பேறு - வாசகர் கவிதை(75)
மகளின் மகப்பேறு – வாசகர் கவிதை(75)
தெருவைத் தீர்த்து முடிக்கும் அவளது கோலங்கள் இருக்கும் இடத்தில் 3 புள்ளி 3 வரிசை கோலம் அவளை வரவேற்றது அந்தி வானம் சாஞ்சதுமே அரட்டை அடிக்கும் அந்த தோழிகளும் அங்கில்லை அவள் கூந்தல் ஏறி முக்தி அடையும் மல்லிகையும் அங்கில்லை பள்ளிப் பருவ பாதுகாவல் லேடிபர்டூம் அங்கில்லை பருவமெய்து படுத்திருந்த குச்சுக் குடிசையும் அங்கில்லை அவள் கரத்திற்கு கழுத்து நீட்டிய கண்ணாடி வளையலும்…
View On WordPress
0 notes
thetamilpoems · 2 years
Text
எதுவுமில்லை - வாசகர் கவிதை(74)
எதுவுமில்லை – வாசகர் கவிதை(74)
நீ துாரிகையா நொடிகளில் வண்ணங்கள் தருகிறாய் உன் புன்”நகை”யால் ஆங்காங்கே சில சேதாரங்கள் நீ ஈர்க்கிறாய் நான் ஈர்க்கப்படுகிறேன் எல்லாம் விதிப்படி உன் புன்னகைக்கு பதில் புன்னகை மட்டும் தந்துவிட்டு கடந்து செல்கிறேன்.. இதைத் தவிர நமக்குள் நிகழ எதுவுமில்லை.. –சுடர் (கீதா) Chennai
View On WordPress
0 notes
thetamilpoems · 2 years
Text
காதலென்றால் என்ன? - வாசகர் கவிதை(73)
காதலென்றால் என்ன? – வாசகர் கவிதை(73)
காதலென்றால் என்ன?கேள்வி வந்தது எனக்கு! சமுத்திரத்தின் உப்பு நிறைந்த உடலில்சதைகிழிக்கும் ஊசியாய்தித்திக்க நுழைகிறதே நதிஅது காதல்! கிட்டாத காலமெனத் தெரிந்தும்எட்டாத் தூரத்திலிருந்து விழும் ஒற்றைத் துளிக்காய்கோடையில் ஏங்கி நிற்கிறதே மண்அது காதல்! ஊரை விழுங்கும் தெம்பிருந்தும்சிறு தீக்குச்சியின் ஒற்றைத் தொடுதலுக்காய்அடங்கி நிற்கிறதே நெருப்புஅது காதல்! புயலடித்து ஓய்ந்தபின்காலொடிந்து வீழ்ந்த…
View On WordPress
0 notes
thetamilpoems · 2 years
Text
கள்ளிக்காடு - வாசகர் கவிதைகள்(71&72)
கள்ளிக்காடு – வாசகர் கவிதைகள்(71&72)
கள்ளிக்காடு வறண்ட வாசம் தேடி போகும் காக்கைக்கு கூடாரம்…! அழுகை தெரியாத ஆற்றுப்படுகை..! பூழுதியை தொட்டு ருசிக்கும் புண்ணிய பூமி..!! பட்டாம்பூச்சி இடம் பெயர்ந்து வானவில்லின் கடைசி நிறத்தை விட்டு போனது வறட்சி..!!   — நா.லோகேஸ் ஈரோடு       ஒன்றேபோல பொழுது புலர்ந்தது புத்தம்புது நாளாய் பொன்கதிர் எழுந்தது புவனம் தழைக்க உக்ரைன் உக்கிர உறைகுருதி கண்டும் இலங்கையின் இல்லாமை இன்னல் கண்டும் பெருந்தொற்று…
View On WordPress
0 notes
thetamilpoems · 2 years
Text
அவள் - வாசகர் கவிதை(70)
இம்மாத வாசகர் கவிதை - 70 அவள் -- பிரியதர்ஷினி கரப்பாக்கம், சென்னை.
தவறென்று தெரியும் போது தட்டிக் கேட்க முற்படுபவள். தனக்கென இடம் பிடிக்க தடைகள் பல கடப்பவள். துச்சமென கருதிய இடத்தில் துணிந்தே நிற்பவள். உடைந்து போகாமல் உயர்ந்து செல்ல முயல்பவள். அன்புக்கு மட்டும் அடங்கி போக முற்படுபவள். வேதனைக்கும் வேடிக்கை காட்டி வென்று எழுபவள். கற்று தேர்ந்து கனவுகளை எட்டிப் பிடிக்க முயல்பவள். நம்பிக்கை கொண்டு நாளும் நடைப் போடுபவள். பல அவதாரம் எடுத்து பகைமையை துறந்தவள். அவளுக்கு…
View On WordPress
0 notes
thetamilpoems · 2 years
Text
பங்குனி உத்திரம்‌ - வாசகர் கவிதை(69)
இம்மாத வாசகர் கவிதை - 69 பங்குனி உத்திரம்‌ - மு அருண்குமார் ஈரோடு
பங்குனி உத்திரமாம்‌! பட்டு மேனியனாம்‌ பழனி ஆண்டவனாம்‌ முருகனின்‌ விழாவாம்‌! தேரிலே ஊர்வலமாம்‌ பக்தர்கள்‌ கூட்டமாம்‌ மாலைகள்‌ போட்டனவாம்‌ தீர்த்தங்கள்‌ எடுத்தனவாம்‌ மாடுகள்‌ பூட்டினவாம்‌ பழனிக்கு பயணமாம்‌ நலிந்த உடலாம்‌ ஓடும்‌ வேகமாம்‌ பாத யாத்திரையாம்‌! வாருதய்யா மக்ககூட்டமாம்‌ முருகனைக்‌ காணவாம்‌ மலையில் மணியாம் அரோகரா கோஷமாம்‌ கணீரென ஒலிக்குமாம்‌ மயில்கள்‌ எல்லாம்‌ மலைக்கு…
View On WordPress
0 notes
thetamilpoems · 2 years
Text
பேய் - வாசகர் கவிதை(68)
இம்மாத வாசகர் கவிதை - 68 பேய் - துரை சந்தோஷ் புதுக்கோட்டை
ஒரு காட்டன் சேலை அல்லது சுடிதார் இல்லை லெக் கிங்ஸ் போட்டு கொள்ள ஆசை இரட்டை ஜடை அல்லது குதிரை வால் போட்டு கொள்ள தான் ஆசை அதிக முத்துக்கள் இல்லாமல் கொலுசு போட இஷ்டம் எனக்கு மல்லிகைக்கு பதில் ரோஜா சூடி கொள்ள அனுமதியுங்கள் பிசாசு என்ற என் பெயருக்கு பதில் உங்கள் பெயரை வைத்து கொள்ள தான் விருப்பம். – துரை சந்தோஷ் புதுக்கோட்டை
View On WordPress
0 notes
thetamilpoems · 2 years
Text
தாகம் - வாசகர் கவிதைகள் (66 & 67)
தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர் கவிதைகள் - 66 & 67 தாகம் --- தனசேகர் கணேசன் கடலூர் தமிழ்க்கழனி --- இர.மணிகண்டன் வேலூர்
உலர்ந்திருந்தயென் உதடுகளுக்கு ஓத்தடமாயுன் ஈர உதடுகள் தணிந்திருந்த தாகத்தினை கூட்டியதே தவிர குறைக்கவில்லையடி… — தனசேகர் கணேசன் கடலூர் தமிழ்க்கழனி எள்ளும், நெல்லும் தமிழ்க்கழனி மேற்செல்லும்! பசும்புல்லும், பஞ்சுமண்ணும் அக்கழனி கொள்ளும்-பெரும் கல்லும், கானக முள்ளும் வரப்பென நில்லும்! கள்ளும் தேன்சொல்லும் விளைச்சலென அள்ளுமே! — இர.மணிகண்டன் வேலூர்
Tumblr media
View On WordPress
0 notes
thetamilpoems · 2 years
Text
போராட்டம் - வாசகர் கவிதைகள்(65)
தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர் கவிதை - 65 போராட்டம் - சுடர் கீதா
———————– களங்கள் மட்டுமே மாறும்… போர்கள் தீருவதில்லை கொல்லவும் ௯டாது கொல்லப்படவும் கூடாது சீறும் நாகங்களுடன் விந்தை விளையாட்டு… ஆயுதமும் நானே கேடயமும் நானே.. விதியின் விதிமுறைகள்.. வலிகளை வார்த்தைகளாய் வார்த்தெடுக்கிறேன் காயங்களாய் எனக்கு கவிதையாய் உனக்கு… – சுடர் கீதா
Tumblr media
View On WordPress
0 notes
thetamilpoems · 3 years
Text
அந்த பெரியார் வீதியில் - வாசகர் கவிதை
தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர் கவிதை - 64 அந்த பெரியார் வீதியில் #கவிதை_சிறுவன் -- அருண்குமார் கோயமுத்தூர்
#அந்த பெரியார் வீதியில் நேர்த்திக்கடன் நடக்காமலுமில்லை #நொந்த கருப்புச்சட்டை எதிர்ப்பை பூர்த்தி செய்யாமலுமில்லை – கல்வி #தந்த காமராசர் தெருவில் பாலகன் யாசகனாகாமலுமில்லை #கந்தையான மனதிலும் அரசாங்கம் சலுகைகள் தராமலுமில்லை #விந்தையான காந்தி பூங்காவில் கொடூரக்கொலை நடக்காமலுமில்லை #மந்தமான நீதியதும் குற்றமதை பதிவு செய்யாமலுமில்லை #சிந்தையைத் தூண்டிய அறிஞர் அண்ணாசிலை எதிரே அந்நியமொழி பள்ளித்…
Tumblr media
View On WordPress
0 notes
thetamilpoems · 3 years
Text
கற்பறுத்தல் - வாசகர் கவிதை
தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர் கவிதை -63 கற்பறுத்தல் -- சதீஷ்வரன் சென்னை
பிணம் தின்னும் கழுகுக்கும் நான் பெருமை பாட நினைக்கிறேன் அழகென உலகம் பார்க்க திசைகள் கொட்டி கிடக்குது மனதையும் பறவையாக்கி பறந்து செல்ல வழிவிடு என்ன குறை கண் பட்டதோ முழங்காலில் மோகம் வெடிக்குதா ★ நிமிர்ந்தா குற்றம மோனு கூட்டம் தொடர்ந்து மிரட்டுது ★ சிரித்தால் சபலம் காட்ட முறை த்தால் வெறிய காட்ட எங்கள் உடல் உனக்கு பாசியாற்றும் தீனியா ★ அழுகையும் கேட்கவில்லை கதறலும் கேட்கவில்லை தனிவரும்…
Tumblr media
View On WordPress
1 note · View note
thetamilpoems · 3 years
Text
விவசாய மசோதா - வாசகர் கவிதை
தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர் கவிதை - 62 விவசாய மசோதா - இசக்கி முத்து லெட்சுமணன் திருநெல்வேலி
கேளாய்…. வறியோனே..! கேளாய்….. வல்லோன் அவன் கூற்றை – வாய்பிளந்து கேளாய்….. இதோ…! சாமானிய பெருமக்களே….! சத்தம் போடாதீர்கள்…. விவசாய பெருங்குடிகளே…! விவாதம் பண்ணாதீர்கள்….. வீதி வரை வந்தால் – மட்டும் விடிந்திடுமா…! என்ன…? தொண்டை கிழிய கத்தினால் – மட்டும் முடிந்திடுமா…! என்ன…? மச மசவென ‌ நிற்காமல்….. மசோதா வருகிறது… மண்டையை ஆட்டுங்கள்…… நச நசவென நச்சரிக்காமல்…. காட்டி இடமெல்லாம் கையெழுத்து…
Tumblr media
View On WordPress
0 notes
thetamilpoems · 3 years
Text
காத்திருக்கும் தலைமகன் - வாசகர் கவிதை
தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர் கவிதை - 61 காத்திருக்கும் தலைமகன் - ரொ.அந்தோணி குழந்தை யேசு விழுப்புரம்
கண் முகிழ்த்தல் கூட கழை செவிமடுக்க ஒலி பீழை காதைக் கடித்த ஊர் துற கால் கிளர்தல் அறிந்து செய் தலையளி முயன்று கான் கழுத்துக் கொடுத்தல் யான் ஆற கை பிடித்தல் நம்பிக்கை உண் முகளித்து மகிழ்ச்சி கொள்- வலி மூளை தொடுமுன் மதி இழக்காது ஆளி நாம் கருமேகம் கண்டு நடனம் கொள்ளும் அளகு போல் உன் அழகு கண்டு வளியில்லா சமயத்திலும் -கவிஞன் வார்த்தை ஊற்று நீர் சுரம் பிடிக்கும் இளமதி புறம் கொள்ள துணை மங்கை இ���ுக்கும் உன்…
Tumblr media
View On WordPress
0 notes
thetamilpoems · 3 years
Text
யாரேனும் பேசுங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர் கவிதை - 60 யாரேனும் பேசுங்கள் - சக்தி மீனாட்சி மதுரை
அடிக்கடி கனவில் வருமந்த மலையுச்சிக் கோவிலும் சரிந்திறங்கும் அருவியும் கிளையமர்ந்த ஒற்றைக்குயிலும் தொந்தரவெனக்கு… அருவிக்கு குயிலின் குரல் … குயிலின் கூவலோ பேரிரைச்சல்… காற்றிலாடாத மணியோடு கோவில் மட்டும் நிசப்தமாய், மிகத் தொந்தரவெனக்கு… இரையும் குயிலையும் பாடும் அருவியையும் தாண்டி பேரமைதிக் கோவில்தான் மிக மிகத் தொந்தரவெனக்கு… அமைதி ,அமானுஷ்யமாகும்போது அத்தனையும் தொந்தரவு… அமைதியாயிருக்கும் அமைதி…
Tumblr media
View On WordPress
0 notes
thetamilpoems · 3 years
Text
விலைமாது - வாசகர் கவிதை
இம்மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர் கவிதை விலைமாது - கெ ம நிதிஷ் பாண்டிச்சேரி
ஓர் அமைதியான இருண்ட இரவில் மூனும் தூங்கிய வேளையில் நாளெல்லாம் அஞ்சி நடுங்கி ஆறும் பார்க்காதவண்ணம் ஏழை பிச்சைக்காரி எட்டுமாத தன் பிள்ளைக்கு நைந்துபோன சேலை போர்த்தி பத்திரமாய் பால்கொடுத்தாள். ##### கோவில் குளங்களில் கோபுரங்கள் நீந்துகின்றன. ##### கண்ணகி சிலையை அடையாளமாக சொல்லிவிட்டு காத்திருந்தாள் விலைமாது. ##### ஒளி தொலைந்த இரவுகளில் வழி மறந்த பறவைகள் நட்சத்திரம் – கெ ம நிதிஷ் பாண்டிச்சேரி
Tumblr media
View On WordPress
0 notes
thetamilpoems · 3 years
Text
நெருடல் - வாசகர் கவிதை
ஜுலை மாதத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர் கவிதை நெருடல் - துரை சந்தோஷ் புதுக்கோட்டை
சில ஆண்டுகள் இருக்கும் சௌந்தர் அண்ணனை பார்த்து… எங்கிருந்தோ ஓடி வந்து பக்கத்து வீட்டு கண்மணி அக்காவை பற்றி விசாரித்தார்: கண்மணி அக்கா சௌந்தர் அண்ணனின் கருப்பு வெள்ளை பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை வைத்திருப்பது பற்றி அவள் வீட்டில் சொல்லிருக்கக்கூடாது என்று இப்போது தோன்றுகிறது… – துரை சந்தோஷ் புதுக்கோட்டை
Tumblr media
View On WordPress
0 notes