Tumgik
#BestHearthospitalinCoimbatore
kghospital · 2 months
Text
A Happy Testimonial from the Patient's Relative - Best Heart hospital in Coimbatore
சிதம்பரத்தை சார்ந்த திரு ராஜன் அவர்களுக்கு இருதய வலி ஏற்பட்டுள்ளது, இதனைத் தொடர்ந்து அங்கே ஒரு மருத்துவமனை அணுகி சிகிச்சை எடுத்ததில் ராஜனுக்கு ஹார்ட் அட்டாக் வந்ததாக அறிவித்தனர் எனவே சிறிதும் தாமதிக்காத உறவினர்கள் இருதய சிகிச்சைக்காக கோவை கே ஜி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர், Dr.நித்தியன் அவர்களை சந்தித்து ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து பார்த்ததில் இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பது தெரிய வந்தது எனவே சிறிதும் தாமதிக்காமல் Dr. அருண்குமார், நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர் அவர்களை சந்திக்கும்படி அறிவுறுத்தினார்.
Dr. அருண்குமார் அவர்கள் திரு ராஜன் அவர்களுக்கு முக்கிய ரத்த குழாயில் அடைப்பு இருப்பதால் உடனடி இருதய அறுவை சிகிச்சை தேவை என்பதை குடும்பத்தாருக்கு தெரிவித்தார். ராஜனின் குடும்பத்தாரும் சம்மதித்தனர். எனவே Dr. அருண் குமார் மற்றும் அவரது மருத்துவ குழுவுடன் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.தற்பொழுது ராஜன் பூர்ண குணமடைந்து நலமுடன் உள்ளார்.
கே ஜி மருத்துவமனையின் சிகிச்சை குறித்து திரு ராஜன் அவர்களின் குடும்பத்தார் தெரிவிக்கையில், Dr. அருண்குமார் அவர்களின் சிகிச்சை முறையும், நோயாளிகளிடம் பழகும் விதம் மிகவும் நல்ல முறையில் இருப்பதாகவும் தங்களுக்கு இருக்கும் அனைத்து சந்தேகங்களுக்கும் சிறிது முகம் சுளிக்காமல் பதில் அளிக்கிறார் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் இருதய நோய் என்றால் பயப்படாமல் கே ஜி மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் , கே ஜி மருத்துவமனையின் தலைவர் Dr. பக்தவச்சலம் அவர்களையும் வெகுவாக பாராட்டினார்.
0 notes